
ஸ்டார் வார்ஸ் உள்பட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகை கேர்ரி ஃபிஷர். இவர் படப்பிடிப்பில் இருந்த போது தீடீர் என நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, லாஸ்ஏஞ்சல்ஸ்சில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கபட்டார்.
இவருக்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் நேற்று மரணம் அடைந்தார்.
அவரது மறைவின் துயரத்தில் இருந்து இன்னும் அவருடைய குடும்பத்தினர்களும் ரசிகர்களும் மீண்டு வராத நிலையில் இன்று கேர்ரி ஃபிஷரின் தாயாரும் மரணம் அடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
மகள் மறைந்த துயரம் தாங்காமல் அவரது தாயாரும் மரணம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
மகள் கேர்ரி ஃபிஷர் மறைந்த சோகம் காரணமாக அவருடைய தாயார் டெபி ரெனால்ட்ஸ் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், மகளின் ஈமச்சடங்கு குறித்த ஆலோசனையில் இருந்தபோது திடீரென உடல்நலம் குன்றியதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற போதிலும் சிகிச்சை பலனின்றி டெபி ரெனால்ட்ஸ் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. நடிகை கேர்ரி ஃபிஷர் இறந்த மறுநாளே அவரது தாயாரும் மரணம் அடைந்தது ஹாலிவுட் படவுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.