பண்டிகை தினத்தில்... பக்கா ஸ்கெட்ச் போட்டு கலக்கவரும் சந்தானம்...

 
Published : Jun 03, 2017, 07:34 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
பண்டிகை தினத்தில்... பக்கா ஸ்கெட்ச் போட்டு கலக்கவரும் சந்தானம்...

சுருக்கம்

santhanam sarva sundharam movie updated news

அறிமுக இயக்குனர் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் சந்தானம் கேரியரிலேயே மிகப்பெரிய படமாக அமைந்திருக்கிறது.

கெனன்யா ஃபிலிம்ஸ் ஜே செல்வக்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. குறைந்த காலத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை தாண்டி படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கது.

ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பிரமாண்டமான காட்சியமைப்புகள், கலர்ஃபுல்லான விஷூவல் மற்றும் சந்தானத்தின் மாறுபட்ட தோற்றத்தை வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தை பற்றி கூறியுள்ள இயக்குனர் பால்கி, "படத்தை சென்சாருக்கு அனுப்பியிருக்கிறோம், ஜுன் மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி எங்கள் படம் ரிலீஸ் ஆகும் என உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார்.

பண்டிகை சூழல் எங்கள் படத்துக்கு பொருத்தமானது, கதையும் அதற்கேற்ற வகையில் இருக்கும், ரசிகர்களுக்கு நிச்சயம் தீனி போடும் இந்த  சர்வர் சுந்தரம். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம். மொழி எல்லைகளை கடந்து சந்தானத்தின் மார்க்கெட் விரிவடைந்திருப்பதையே இது காட்டுகிறது" என மகிழ்ச்சியோடு கூறினார் இயக்குனர் பால்கி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிங்கிள் பசங்க டைட்டில் வின்னர் யார்? பைனல்ஸில் கூமாபட்டி தங்கப்பாண்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது