திரையரங்கில் வெளியிட முடிவு செய்த சந்தானத்தின் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

Published : Aug 05, 2021, 05:30 PM IST
திரையரங்கில் வெளியிட முடிவு செய்த சந்தானத்தின் திரைப்படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ்!

சுருக்கம்

சந்தானம் நடித்து முடித்துள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  

சந்தானம் நடித்து முடித்துள்ள 'டிக்கிலோனா' திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ள நிலையில், இதுகுறித்த அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

​எழுத்தாளரும் புதுமுக இயக்குநருமான கார்த்திக் யோகி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட் உருவாகி திரைப்படம் “டிக்கிலோனா”. நடிகர் சந்தானத்துடன்,  சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகிபாபு, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், முனிஷ்காந்த் என மிகப்பெரிய காமெடி பட்டாளமே களம் இறங்கியுள்ளது. இது எல்லாம் போதாது என்று அனகா, ஷிரின் என்ற இரண்டு ஹீரோயின்கள் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளனர். 

“பலூன்” படத்தை தயாரித்த சினிஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய உள்ளது. படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு தற்போது முடிக்கப்பட்டு படம் திரையரங்கில் ரிலீஸ் செய்ய தயாராக இருந்தது.

ஆனால் கொரோனா தலைதூக்கியதன் காரணமாக, திரையரங்குகள் அனைத்தும் மூடியே கிடைப்பதால், தற்போது திரையரங்கில் வெளியிடும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு, ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, இந்தப் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. இதன் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த படத்தின் 3 கெட்டப்புகள் போட்டு சந்தானம் நடித்து போஸ்டர்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. அதே போல் சந்தானம் - யோகிபாபு காம்பினேஷன் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு வேற லெவலுக்கு இருக்கிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாய தொறக்காத தங்கமயில்'; 80 சவரன் நகையின் உண்மை தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 மெகா ட்விஸ்ட்!
அதிரடி வெற்றிகள் முதல் சர்வதேச கவனம் வரை: 2025-ல் அதிகம் டிரெண்டிங்கில் இருந்த டாப் 5 இயக்குநர்கள் யார் யார்?