"சங்கிலி புங்கிலி கதவ  தொற" ஐக் மூலம் அட்லீக்கு அடிக்குமா ஜாகிக்போர்ட்...

 
Published : May 17, 2017, 06:46 PM ISTUpdated : Sep 19, 2018, 12:37 AM IST
 "சங்கிலி புங்கிலி கதவ  தொற" ஐக் மூலம் அட்லீக்கு அடிக்குமா ஜாகிக்போர்ட்...

சுருக்கம்

sangili bungili kathava thora movie relese date

சினிமா தோன்றிய காலத்திலிருந்தே நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்  படங்களும் ,திகில் படங்களும் வெற்றி படங்களாகவே அமைந்து வருகிறது.

இந்நிலையில், 'ராஜா ராணி', 'தெறி', போன்ற வெற்றி படங்களை இயக்கிய      அட்லீ ஒரு தயாரிப்பாளராக திகிலும் , நகைச்சுவையும் கலந்த ஒரு படத்தை தயாரிக்கிறார்.

அட்லீயின் சொந்த பட நிறுவனமான 'ஏ ஃபார் ஆப்பிள்'  நிறுவனம், பாக்ஸ்  ஸ்டார் நிறுவனத்துடன்  இணைந்து தயாரிக்கும் "சங்கிலி புங்கிலி கதவ  தொற " படத்தின் கதாநாயகன் ஜீவா.  இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீ திவ்யா .இவர்களுடன் ராதா ரவி ,ராதிகா சரத்குமார் ,சூரி ,கோவை சரளா ,தம்பி ராமையா என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க விஷால் சந்திரா சேகர் இசை அமைக்க இப்படத்தை இயக்கியுள்ளவர் புதிய இயக்குனர் ஐக் .

 பாக்ஸ்  ஸ்டார்   நிறுவனத்தின் முதன்மை அதிகாரி  விஜய் சிங் கூறும்போது " சங்கிலி புங்கிலி கதவ  தொற" கோடைகால விடுமுறைக்கு ஏற்ற படமாக இருக்கும்  என்றும்,  நகைச்சுவை  கலந்த திகில் படத்திற்கு கிடைக்கும் மாபெரும் வரவேற்பு இந்த படத்திற்கும் கிடைக்கும் என கூறியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் அட்லீ கூறுகையில் " சங்கிலி  புங்கிலி கதவ  தொற  வருகின்ற 19ஆம் தேதி வெளியாகிறது என்பதை மிக பெருமையுடன் அறிவிக்கிறேன் .இந்த படத்தின் ட்ரைலருக்கு  கிடைத்த  வரவேற்பு உற்சாகமூட்டுகிறது .இதுவரை இந்த படத்தை பார்த்தவர்கள் கூறிய பாராட்டு உரைகள் அனைத்தும் இளம் இயக்குனர் ஐக் அவர்களையே சாரும் .

ஜீவா தனக்கே  உரிய  பாணியில் மிக சிறப்பாக இந்த படத்தில் நடித்துள்ளார் .என்னுடைய நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மிக பெரிய வெற்றியை தருவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறினார் அட்லீ .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்