
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் நடித்த பிரமாண்ட படைப்பான பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி சக்க போடு போட்டு வருகிறது. இந்திய சினிமா வராலாற்றில் முதல் முறையாக ரூ.1300 கோடியை வசூலித்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
இன்னமும் பாகுபலி வெளியிட்ட திரையரங்குகளில் கூட்டம் குறையவில்லை... இப்படம் தென்னிந்திய மொழிப்பாடம் தான் என்றாலும் தமிழில் சந்திரலேகாவை அடுத்து இதுவரை இப்படி ஒரு படம் வெளியாகவில்லை...
அப்படி ஒரு முயற்சியை முதல் கட்டமாக இயக்குநர் சுந்தர்.சி எடுத்து வருகிறார். ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, ஜெயம் ரவி,ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் பிரமாண்ட 'சங்கமித்ரா' எனும் படைத்த சுந்தர் சி இயக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகிவிட்டது.
காமெடி படங்களை இயக்குவதில் கிங்கான சுந்தர்.சி முதல் முறையாக பிரமாண்ட படத்தில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.
'சங்கமித்திரா' படத்தின் துவக்க விழா அடுத்த வாரம் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவின் ஒரு பகுதியை 'சங்கமித்திரா' குழுவினர் ஸ்பான்சர் செய்துள்ளதாக தகவல். அன்று ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் சுந்தர்.சி, தயாரிப்பாளர், நடிகர், நடிகைகள் கலந்து கொள்ள உள்ளார்களாம்.
இந்நிலையில்,`சங்கமித்ரா' படமும் இரு பாகங்களாக வெளியாக இருக்கிறது. வரலாற்றுக் கதையில் பிரமாண்டமாக உருவாகவுள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 101-வது படமாக பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளது.
இப்படத்திற்காக ஆர்யா, ஜெயம் ரவி இருவரும் ஒன்றரை வருடம் கால்ஷீட் கொடுத்ததுடன், தங்களது உடல் எடையையும் அதிகரித்து போர்ப்படை தளபதிகளைப்போல மிரட்டலாக காட்சிதர தயாராகி வருகின்றனர் வருகின்றனர். அதேநேரத்தில் குதிரை சவாரி, வாள் சண்டை உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
இப்படத்தில், ஆர்யா, ஜெயம் ரவிக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வரும் படக்குழு, ஸ்ருதிஹாசனை ஒரு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்துள்ளது. தற்போது ஸ்ருதியும் இப்படத்திற்காக லண்டனில் வாள் பயிற்சி எடுத்து வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.