'நாட்டுல என்ன நடக்குது" பட்டையை கிளப்பும் சமுத்திர கனி..!

 
Published : Nov 18, 2017, 08:28 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
'நாட்டுல என்ன நடக்குது" பட்டையை கிளப்பும் சமுத்திர கனி..!

சுருக்கம்

samuthirakani single track

V ஸ்டுடியோஸ் மற்றும் P.G மீடியா வொர்க்ஸ் வழங்கும் திரைப்படம் மதுரைவீரன். விஜி சுப்ரமணியன் தயாரிப்பில் , சண்முகபாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியுள்ளார் P.G.முத்தையா. 

இப்படத்தின் முதல் சிங்கள் பாடல் “ என்ன நடக்குது நாட்டுல “ இன்று காலை 11மணியளவில் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூகத்தில் நடக்கும் அவலங்களை தோலுரிக்கும் வகையில் புரட்சிகரமாக இந்த பாடல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றும் இந்த பாடலை கவிஞர் யுகபாரதி எழுதியுள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பாடலிலிருந்து சில வரிகள்.

“ கொள்ளை அடிச்சவன் கூட்டுல,

 நம்ம குடும்பம் நிக்குது ரோட்டுல. 

எதையும் நாம பாக்காம எதுத்து கேள்வி கேக்காம ,

 அடங்கி ஒடுங்கி கிடப்பதால ஆளுக்காளு நாட்டாம.“ போன்ற பல புரட்சிகரமான வரிகளோடு “ என்ன நடக்குது நாட்டுல “ பாடல் வெளிவந்து பரபரப்பை கிளப்பியுள்ளது . இந்த பாடல் வெளியாவதற்கு முன்னரே என்ன நடக்குது நாட்டுல என்ற ஹாஷ் டேக்கில் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் பற்றி ட்வீட் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்