
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்து வரும் படத்தில் இருந்து முக்கிய நடிகர் ஒருவர் விலகிய நிலையில், இந்த படத்தில் தற்போது சமுத்திரக்கனி கமிட் ஆகியுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக புகைப்படமும் வெளியாகி வைரலாகி வருகிறது.
அருண்விஜய் நடித்து வரும் #AV33 படத்தின் படபிடிப்பு சில வாரங்களாக ராமேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகிறார். சென்னை, பழநி, காரைக்குடி, தூத்துக்குடி போன்ற பகுதிகளை தொடர்ந்து ராமேஸ்வரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைத்த படமாக இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் முதல் நுரையாக, அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ், யோகிபாபு, அம்மு அபிராமி, தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்து வந்தனர். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில், இந்த படத்தில் இருந்து ஒரு சில காரணங்களால், நடிகர் பிரகாஷ் ராஜ் விலகி விட்டதாகவும், தற்போது அவருக்கு பதில், பிரபல நடிகர் சமுத்திரக்கனி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை உறுதி செய்யும் விதமாக, சில புகைப்படங்களும் வெளியாகி வைரலாகியுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை, த்ரிஷா இல்லனா நயன்தாரா, என் ஆளோட செருப்பக் காணோம், இமைக்கா நொடிகள், இஃக்லூ படங்களை தொடர்ந்து Drumsticks productions சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக அதிகப்படியான ரிஸ்குகளை எடுத்து நடித்து வருகிறார் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.