சின்மயி சொல்வதெல்லாம் உண்மை தான்... முதல் ஆளாக வாய்திறந்த சமந்தா!

Published : Oct 11, 2018, 03:24 PM IST
சின்மயி சொல்வதெல்லாம் உண்மை தான்...  முதல் ஆளாக வாய்திறந்த சமந்தா!

சுருக்கம்

"மிடூ" போராட்டத்தில் பாடகி சின்மயி வைரமுத்து கூறியிருப்பது முற்றிலும் உண்மையே. 

"மிடூ" போராட்டத்தில் பாடகி சின்மயி வைரமுத்து கூறியிருப்பது முற்றிலும் உண்மையே. அதை இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஏன் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புவது மடத்தனமானது’ என்று ஆணித்தரமாக களத்தில் இறங்கியியிருக்கிறார் தமிழ், தெலுங்குத் திரையுலக ரசிகர்களின் டார்லிங் சமந்தா.

இது குறித்து இன்று தனது ட்விட்டரில் துணிந்து பதிவு செய்த சமந்தா, ‘டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள்.  உங்களது இந்த நேர்மையான குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi என்று ட்விட்டரில் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

சமந்தாவின் ட்விட்டரில் தொடரும் சிலர் அதை இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியிடவேண்டிய அவசியம்? என்று கமெண்ட்கள் அடித்தபோது, இப்படியெல்லாம் கேட்பது மடத்தனமானது. சின்மயி அப்போது பாதுகாப்பாக உணர்ந்திருக்கமாட்டார்.இனி இதுபோன்ற தோலுரிப்புகள் தொடர்ந்தால், அனுமதியின்றி பெண்களைத் தொட ஆண்களுக்கு நடுக்கம் வரும்’ என்று பொழந்து கட்டிக்கொண்டிருக்கிறார் சமந்தா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!