
திருமணத்திற்கு பின்பும், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ பேபி திரைப்படம், நல்ல விமர்சனங்களை பெற்று பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சமந்தா ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத புதிய முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் சமீப காலமாக, திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலர் வெப் சீரிஸில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில், மனிஷா கொய்ராலா , பாபி சிம்ஹா, பிரசன்னா, உள்ளிட்ட பலர் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்கள். இவர்களின் வரிசையில் தற்போது சமந்தாவும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல ஆன்லைன் நிறுவனம் ஒன்று, பெரியத்தொகை கொடுத்து வெப் சீரிஸில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு உள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத இந்த பிளான் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.