திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா...!

 
Published : Oct 12, 2017, 02:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:17 AM IST
திருமணத்திற்கு பின் பெயரை மாற்றிக்கொண்ட சமந்தா...!

சுருக்கம்

Samantha change the name after marriage

நடிகை சமந்தா சென்னையில் பிறந்து வளர்ந்து, பல போராட்டங்களைக் கடந்து சினிமாத்துறையில் நுழைந்து முன்னணி  நடிகையாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர்.

இவர் முதலில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்தார். இவர்கள் காதல் திருமணப் பேச்சு வரை சென்று திடீர் என ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நின்று போனது. இதன் பின்னர், சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்தார் சமந்தா.

பின் தன்னுடைய 9  வருட நண்பரான நாகசைதன்யாவை காதலிக்கத் தொடங்கினார் சமந்தா. ஆரம்பத்தில் இவர்களுடைய காதலுக்கு நாகசைதன்யா வீட்டில் எதிர்ப்புகள் இருந்தாலும், சமந்தாவின் குணம் நாகார்ஜூனாவிற்கு பிடித்துப் போனதால் இவர்களுடைய காதலுக்கு பச்சைக் கொடி இரு வீட்டிலும் காட்டப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய காதலனைக் கரம் பிடித்த சமந்தா தற்போது, நாகசைதன்யா குடும்பத்திற்காக தன்னுடைய பெயரை சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டாராம். இதனை சற்றும் எதிர்பார்க்காத நாகார்ஜூனா குடும்பத்தினர் சமந்தாவின் செயலைப் பார்த்து மகிழ்ச்சியில் உள்ளனராம்.

ஏற்கனவே சமந்தா திருமணத்திற்கு முன்பு ஏழுமலையான் கோவிலுக்கு மூன்று முறை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2026-ஆம் ஆண்டுக்கான மாஸ்டர் பிளான் ரெடி... விரைவில் குட் நியூஸ் சொல்ல தயாராகும் ரிஷப் ஷெட்டி
காந்தாராவை அடிச்சு தூக்கிய துரந்தர்... இந்த ஆண்டு அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள் இவைதான்!