
காதல்
தமிழில் 'மாஸ்கோவின் காவிரி' என்ற படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் சமந்தா. தொடர்ந்து தமிழ் தெலுங்கு என்று நடித்து கலக்கி கொண்டிருந்த இவர் தெலுங்கு படத்தில் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவுடன் நடிக்கும் போது அவர் மீது காதல் கொண்டார்.
திருமணம்
இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நம்ம பல்லாவரத்து பொண்ணு சமந்தா தெலுங்கு மருமகளாகி விட்டார்.
திருமணம் முடிந்தால் நடிப்புக்கு முழுக்கு என்ற கோட்பாட்டை மாற்றி திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிக்கும் படங்கள்
தமிழில் சிவகாரத்திகேயனுடன் பெயரிப்படாத படத்தில் நடிக்கிறார்.செம க்யூட் ஆக தாவணியில் தோன்றுகிறார்.மேலும் இப்படத்திற்கு சீமராஜா என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் விஷாலுடன் இரும்புத்திரை விஜய் சேதுபதியுடன் சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் விஷாலுடன் நடித்த இரும்புத்திரை அடுத்த மாதம் வெளிவரவுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் சமந்தா கூறியதாவது
கவர்ச்சி
சினிமா என்பது கவர்ச்சி உலகம்.தேவையில்லாமல் கவர்ச்சியை திணிப்பது எனக்கு பிடிக்காது. எந்த வித தடையும் இல்லாததால் தான் என்னால் படத்தில் நடிக்க முடிகிறது.
சண்டை
எனக்கும் என் கணவருக்கும் சண்டை வரும் .ஆனால் நான் சமாதானமாகி விடுவேன் என்று கூறியுள்ளார்.
திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று கணவர் வீட்டு தரப்பிலிருந்து கூறிய போதும் சமந்தா கவர்ச்சி பற்றி இப்படி வெளிப்படையாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.