எக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை... 

 
Published : Feb 10, 2018, 03:10 PM ISTUpdated : Sep 19, 2018, 01:56 AM IST
எக்ஸ் சோனுக்கு தடை.. எக்ஸ் வீடியோஸூக்கு க்ரீன் சிக்னலா? சென்சார் போர்டின் ஓரவஞ்சனை... 

சுருக்கம்

censor board give the a certificate for x videos movie

ஒரு படம் சென்சார் போர்டின் விதிகளைத் தாண்டி வரும்போது  சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் தாங்கிக் கொண்டுதான் வெளியாகிறது.

சென்சாரைப் பொருத்தவரையில் அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சனையில்லை. சான்றிதழ் எளிதாகக் கைக்கு வந்துவிடும். 

கொஞ்சம் சமூகப்பிரச்சனைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் எக்ஸ் சோன் என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம். 

மேல்முறையீடு வரை சென்றும் கடைசி வரை  வெளி வர முடியாமலே போய்விட்டது. ஆனால் இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும் சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடமிருந்து பாராட்டும் கிடைத்திருப்பது இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் இந்தி ஆகிய மொழியில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ளார். அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ண்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

எக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்ததெப்படி? படத்தின் இயக்குநர்  சஜோ சுந்தரைக் கேட்டோம்...

நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை... வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது. 

படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம். 

ஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம். 

அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள். 

இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது? 

அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.  

 நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும். 


எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!