
அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வரும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது நண்பர்களுடன் சேர்ந்து தம் அடிக்கும் வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ‘இப்படி விநாயகருக்குப் பின்னால் நின்று தம் அடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?’என்று பொது மக்கள் அவரை கடுமையாக விகர்சித்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே விநாயகர் சதுர்த்தியை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடும் நகரங்களில் எப்போதும் முதலிடம் வகிப்பது மும்பைதான். அந்த விழாக்களில் இஸ்லாமிய நடிகர்களும் எப்போதும் தவறாமல் கலந்துகொள்வார்கள். அந்த வகையில் தனது சகோதரி அப்ரிதா ஏற்பாடு செய்திருந்த விநாயகர் பூஜை ஒன்றில் நடிகர் சல்மான் கான் கலந்துகொண்டார்.
துவக்கத்தில் நிகழ்ச்சியில் பாடப்பட்ட கணபதி பாடல்களுக்கு மக்களோடு மக்களாக நடனமாடிய சல்மான் கான், சற்று நேரத்திற்கு கூட்டத்திலிருந்து சற்று நகர்ந்து அங்கே வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான விநாயகர் சிலைக்குப் பின்னால் ஒதுங்கி, தனது நண்பரும் இயக்குநருமான அதுல் அக்னிஹோத்ரியுடன் சேர்ந்து தம் அடிக்க ஆரம்பித்தார். அதைப் படம் பிடித்த சிலர் வலைதளங்களில் அப்லோட் செய்தனர்.
துவக்கத்தில் விநாயகர் சதுர்த்தியில் மத உணர்வு பாராட்டாமல் கலந்துகொண்டதற்காகப் பாராட்டப்பட்ட சல்மான் கான், அவர் தம் அடிக்கும் வீடியோ வெளியானவுடன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ‘விழாவுல கலந்துக்க வந்துட்டு இப்படி விநாயகருக்குப் பின்னால் நின்று தம் அடிக்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா பிரதர் சல்மான் கான்?’ என்று அவரை நோக்கி விமர்சனக் கணைகள் பாய்கின்றன.
சல்மான் கான் தம் அடிக்கும் வீடியோ.
..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.