
கபீர் கான் இயக்கத்தில் வெளியான 'பஜ்ரங்கி பைஜான்' படத்திலன் கரீனா கபூர் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தினர். இப்படம் 17 ஜூலை 2015 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்தப் படம் இந்தியாவில் வசூலை வாரிக்குவித்தது. சீனாவில் மட்டும் அப்படம் இந்திய மதிப்பில், ரூ.289.6 கோடி வசூல் செய்துள்ளது.
மேலும் 2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அதிக வசூல் செய்த படங்கள் பட்டியலில் 15வது இடத்திற்கு முன்னேறியது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சமீபத்தில் 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்தார். இதன் தொடர்ச்சியை இந்த இரண்டாம் பாகத்தின் கதையை எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுத உள்ளதாக கூறப்படுகிறது. விஜயேந்திர பிரசாத் 'அசல்' படத்திற்காக சிறந்த கதைக்கான தேசிய விருதை வென்றார். அதோடு 'பஜ்ரங்கி பைஜான்' முதல் பாகத்திற்கான சிறந்த கதையமைப்பிற்காக பிளிம் பேர் அவார்டையும் பெற்றுள்ளார்.
இருபத்தைந்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுத்தாளராக இவரின் பெரும்பாலான படங்கள் பிளாக்பஸ்டர்களாக அமைந்தன. அவரது சமீபத்திய மிகவும் வெற்றிகரமான படங்களுக்கு திரைக்கதை எழுதுயுள்ளார். பாகுபலி 1, மெர்சல், பாகுபலி 2, பஜ்ரங்கி பைஜான் மற்றும் மணிகர்னிகா உள்ளிட்ட படங்கள் விஜயேந்திர பிரசாத் திரைக்கதையில் மிளிர்ந்தன.
இந்நிலையில் தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர் , எஸ்எஸ் ராஜமௌலி மற்றும் ஆர்ஆர்ஆர் நடிகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ஆலியா பட் ஆகியோர் பெரிய நிகழ்வில் கலந்து கொண்ட 'RRR' முன் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்ட சல்மான் கான், 'பஜ்ரங்கி பைஜான்' படத்தின் இரண்டாம் பக்கத்திற்கும் ராஜமௌலியின் தந்தையே திரைக்கதை எழுத்தவுள்ளதை அறிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.