bigg boss 5 tamil elimination : இறுதி வரை தப்பித்து நேற்று வசமாக சிக்கி கொண்ட போட்டியாளர்....

Kanmani P   | Asianet News
Published : Dec 20, 2021, 07:02 AM ISTUpdated : Dec 20, 2021, 07:04 AM IST
bigg boss 5 tamil elimination : இறுதி வரை தப்பித்து நேற்று வசமாக சிக்கி கொண்ட போட்டியாளர்....

சுருக்கம்

 bigg boss 5 tamil elimination : ஒவ்வொரு வாரமும், எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபிநய் தான் இந்த வாரம் வெளியேறி உள்ளார்.  

பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம், யாருமே சற்றும் எதிர்பாராத போட்டியாளர்களின் ஒருவரான இமான் அண்ணாச்சி வெளியேறினார். இவரை தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறுவார் என்று வழக்கம் போல் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை கூற துவங்கி விட்டனர்.

இந்த வாரம் நாமினேஷன் படலம் சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. அதாவது நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் அதில் இருந்து தப்பிப்பதற்காக வாய்ப்பையும் பிக்பாஸ் அமைத்து கொடுத்தார்.

அந்த வகையில், இந்த வாரம் முழுவதும் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றவர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் பிக்பாஸ் கூறியிருந்தார்.

அந்த வகையில் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்த, சிபி (Ciby), நிரூப், சஞ்சீவ் (Sanjeev), தாமரை (Thamarai), அமீர் (Ameer) ஆகியோர் நாமினேஷனில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் அபினய் (Abinay), பிரியங்கா (Priyanka), பாவனி (Pavani), வருண் (varun), அக்ஷரா (Akshara) மற்றும் ராஜூ (Raju) ஆகிய 6 பேர் நாமினேஷன் செய்யப்பட்டதாக பிக்பாஸ் அறிவித்தார்.

இந்நிலையில் இந்த வாரம் யார் குறைந்த வாக்குகளுடன் வெளியேறுவார் என்கிற ஆவல் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. அந்த வகையில் இந்த வாரம் மிக குறைந்த வாக்குகளுடன் வெளியேறும் பெயர் பட்டியலில் வருண் மற்றும் அபிநய் ஆகியோர் இருந்தனர்.

இவர்களில் ஒவ்வொரு வாரமும், எலிமினேஷனில் இறுதி வரை வந்து, தப்பிப்பதை வழக்கமாக வைத்திருந்த அபிநய். ஒருவேளை பெரிய இடத்து பிள்ளை என்பதால் ஏதாவது சலுகை இருக்குமோ என்று ரசிகர்கள் கேட்டு வந்தனர். ஆனால் இந்த வாரம் அபிநய் தான்வெளியேறி உள்ளார்.

கடந்த முறை நெட்டிசன்கள் கணிப்பு தவறினாலும், இந்த வாரம் கன கச்சிதமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காதல் மன்னனின் பேரன் பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் சர்ச்சையில் அரசல் புரசலாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!
கார்த்தி படத்தின் விதி; தள்ளிப்போகும் 'வா வாத்தியார்' ரிலீஸ்: முடிவில்லாத காத்திருப்பு; ஏமாற்றத்தில் ரசிகர்கள்!