சர்கார் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்களுக்காக மட்டும்...

Published : Nov 05, 2018, 03:21 PM IST
சர்கார் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவங்களுக்காக மட்டும்...

சுருக்கம்

ஒருவழியாக ‘சிம்டாங்காரன்’ என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதை எழுதிய பாடலாசிரியர் விவேக். தற்போது படம் வெளியாகவுள்ள சூழலில், அப்பாடலில் இருக்கும் வார்த்தைகளுக்கு முழுமையான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.

சர்கார் படத்தின் சிம்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியாமல் கீழ்ப்பாக்கத்தில் அட்மிட் ஆவதாக இருந்தவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி

ஒருவழியாக ‘சிம்டாங்காரன்’ என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதை எழுதிய பாடலாசிரியர் விவேக். தற்போது படம் வெளியாகவுள்ள சூழலில், அப்பாடலில் இருக்கும் வார்த்தைகளுக்கு முழுமையான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 

சிம்டாங்காரன் பாடலின் மொழி – சென்னைத் தமிழ். பல்வேறு மொழிகளின் பாதிப்பு வெளிப்படுவதால், எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல சொற்கள் இருந்தாலும் (எ.கா- டர் இந்தி, உட்டா லக்கடி உருது) எதார்த்தமான, உணர்வுப் பூர்வமான, இனிமையான ஒலிக் கோர்வைகளை உடைய மொழி. எளிய மக்களின் வாழ்விற்கு அருகில் இருக்கும், அவர்கள் வாழ்வியலை பிரதிபலிக்கும், கொண்டாடும் இம்மொழியில் இப்பாடலை எழுதியதில் பெருமை அடைகிறேன்.

அர்த்தம் எளிதில் புரியாததால், அதைப் புரிந்து கொள்ளத் துடிக்கும் பரவசமே பெரும்பாலும் இம்மொழியின், இவ்வகை பாடல்களின் (எ.கா – அட்டக்கு பட்டக்கு டிமிக்கடிக்குற) தனிச் சிறப்பு என்பது என் தாழ்மையான கருத்து. 

அதன் வெளிப்பாடே புரிந்தும் புரியாமலும் இருக்கும் இப்பாடலின் வரிகள். உங்களின் ரசனையையும் பின்னூட்டத்தையும், மதிக்கும் காரணத்தினால் இப்பாடலின் பொருளை வெளியிடக் கடமைப்பட்டுள்ளேன்.

பிழை இருப்பின் – மன்னிக்கவும்

நிறை இருப்பின் – அன்பைப் பகிரவும்

நன்றி

#Simtaangaran – Chennai Tamil

* பக்குரு – ஒரு வகை மீன் வலை

* பல்டி பக்குர – எமாத்தி பணத்த சுருட்டுரவன (வலை மீனை சுருட்டுவது போல)

* டர்ல – பயத்துல

* டர்ல உடணும் – பயத்துல வச்சுருக்கணும்

* பல்து – பல்தா கை – பெரிய ஆள், பலம் வாய்ந்தவன்

* வர்ல்டு – உலகம்

* பிஸ்து – பிஸ்தா

* பிசுறு கெள்ப்பி – தூள் கெளப்பு

* நெக்குலு – நக்கல்

* பிக்குலு – ஊர்காய்

* நெக்குலு பிக்குலு – கெத்தான காரசாரமான ஆள்

* தொக்கல் – அந்தரம்

* தொட்டன்னா தொக்கல் – அவன தொட்டன்னா அந்தரத்துல விட்டுடுவான்

* மக்கரு – பழுது

* தர்ல – தரையில

* அந்தரு – தகராறு

* சிம்டாங்காரன் – கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்

கண் சிமிட்டாம சிலர் பார்க்க தோணுமே.. அந்த ஒருவன் நம் # சிம்டாங்காரன்

* நின்டன் பாரன் – நிலையான ஒரு எடத்த எனக்குனு உருவாக்கிட்டேன் பார்

* முஸ்டு – உன்ன முடிச்சுட்டு

* அப்டிக்கா – அந்தப் பக்கம்

* பக்குல போடன், விர்ந்து வக்க போறன் – Buckle up n get ready for my treat

* கொக்கலங்கா – வட சென்னை விளையாட்டு

* குபீலு – பொங்கும் சிரிப்பு

* நம்ம புஷ்டுருக்க கோட்ட இல்ல, அல்லா ஜோரும் பேட்டயில – என் சர்கால கோட்டைகள் இல்ல, என் சந்தோஷமெல்லாம் என் மக்களிடத்தில்

* வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் – Nov 6, 2018

இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்திருக்கிறார். விவேக்குக்கு ஒரு விவேகமான பதிலை தமிழ்ப்புலவர்கள்தான் சொல்லவேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

MGR - Saroja Devi : காத்திருந்த எம்ஜிஆர்.! காதலை நிராகரித்த சரோஜா தேவி.! முன்னணி ஹீரோக்களிடமே கெத்து காட்டிய கன்னடத்து பைங்கிளி.!
திருமணத்தை நிறுத்திய சேரன்... அதிர்ச்சியில் சந்தா - அய்யனார் துணை சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்டா?