
இந்தி நடிகர் சையஃப் அலி கான் அடுத்த மாதம் முதலாவது பிறந்தாநாள் கொண்டாட இருக்கும் தனது மகன் தைமூர் அலி கானுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.
பாலிவுட் நட்சத்திரங்களான கரினா கபூர் - சையஃப் அலிகான் தம்பதியருக்கு கடந்த டிசம்பர் மாதம் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.
அந்த குழந்தைக்கு தைமூர் அலி கான் என்று பெயர் சூட்டியுள்ளனர் இந்த காதல் ஜோடி.
வரும் டிசம்பர் மாதம் ஒரு வயதாகும் தைமூர் அலி கானுக்கு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான ஸ்வான்கி எஸ் ஆர் டி சொகுசு காரை தந்தை சையஃப் அலி கான் பரிசகா அளித்துள்ளார்.
இந்த ஆடம்பரக் காரில் குழந்தை அமர்வதற்கு என்று சிறப்பு இருக்கையும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தனது மகனுக்கு சிகப்பு நிறம் மிகவும் பிடிக்கும் என்பதால் அந்த நிறத்திலேயே கார் வாங்கியதாகவும் நடிகர் சையஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.