இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது !!! டுவிட்டரில் கமெண்ட் அடித்த கமல் !!!

 
Published : Nov 15, 2017, 07:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியைத் திணிக்கிறது !!! டுவிட்டரில் கமெண்ட் அடித்த கமல் !!!

சுருக்கம்

kamal twitter

நடிகர் கமல்ஹாசன் புகைப்படத்தை சிறுவன் ஆவேசமாக கத்தியால் குத்திக் கிழிக்கும் வீடியோ வெளியாகி வைரலாக பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்து தீவிரவாதம் குழந்களின் கைகளில் கத்தியைத் திணிக்கிறது என டுவிட்டரில் கமெண்ட் அடித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தனது கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆனாலும் அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில் சிறுவன் ஒருவன் நடிகர் கமலஹாசனின் படத்தை கத்தியால் குத்திக் கிழிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனது டீவிட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள கமல், இந்து தீவிரவாதம் குழந்தைகள் கையில் கத்தியை திணிக்கிறது. மனம் பதறுகிறது. நீங்கள் சொன்னதை சரியென்று நிறுவுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.


https://pbs.twimg.com/profile_images/880810186885038080/BL4MJiAe_normal.jpgKamal Haasan 

✔@ikamalhaasan

என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன் என குறிப்பிட்டுள்ளார்.

9:03 PM - Nov 14, 2017

ஆனால் நெட்டிசன்கள் வழக்கம் போல கமலின் டுவீட்  புரியாமல் காலும் புலம்பத்தொடங்கிவிட்டனர். ஆனாலும் ஏற்கெனவே, இந்து தீவிரவாதம் குழந்தைகளின் கையில் கத்தியை திணிக்கிறது என்று கமல் தெரிவித்ததை அவரது ஆதரவாளர்கள் நினைவூட்டி டுவிட்டர் பதிவுகள் வரத் தொடங்கியுள்ளன.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!