
வாரிசு நடிகையான ராதிகா 'கிழக்கே போகும் ரயில்' படத்தின் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்து ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு 80களில் நாயகியாக நடித்தவர்.
தற்போது வெள்ளித்திரையில், விஜய், அஜித், விஜய் சேதுபதி ஆகிய நடிகர்களுக்கு அம்மா வேடத்திலும், சின்னத்திரையில் சீரியல் தயாரிப்பாளர் மற்றும் 'வாணி ராணி' என்கிற சீரியலில் இரட்டை வேடத்திலும் நடித்து வருகிறார்.
பிரபல தொலைக்காட்சியில் 9:30க்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலர் ரசிகர்கள். தற்போது இந்த சீரியல் இன்னும் இரண்டு மாதத்தில் முடிவடைய உள்ளதாக ராதிகாவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி பல இல்லத்தரசிகளுக்கும், இந்த சீரியலை வாரத்தில் ஆறு நாட்கள் தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே ராதிகா... இதே தொலைக்காட்சியில், அண்ணாமலை, சித்தி, என இரண்டு சீரியலில் 1000 எபிசோடுகளைத் தாண்டி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.