
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகர் வையாபுரிக்கு அனைவரிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரை ரசிக்காத ஆளே இல்லை எனலாம்.
இந்நிலையில் நடிகர் வையாபுரி திருவாரூரில் உள்ள “ நியூ பாரத் மேல்நிலை பள்ளி “ 25வது ஆண்டு விழா மற்றும் குழந்தைகள் தின விழா சிறப்பு நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டு குழந்தைகளோடு உரையாடினார்.
விழாவில் குழந்தைகள் நடிகர் வையாபுரியிடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் அடிக்கடி பேசும் “ காலையானால் ஈ தொல்லை , இரவு ஆனால் கொசு தொல்லை , அது எல்லாவற்றையும் விட இவங்க தொல்லை “ என்ற வசனத்தை பேச சொல்லியும் , பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பேசிய மற்ற விஷயங்களை பேச சொல்லியும் கோரிக்கை வைத்து. அவர் பேசியதும் அதை கேட்டு கை தட்டி ரசித்தனர்.
இதுவரை வையாபுரியிடம் ஜெமினி திரைப்படத்தில் இடம்பெற்ற “ ஏக் மார் தோ துக்கடா “ வசனத்தை பேச சொல்லி தான் அனைவரும் கேட்பார்களாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் Pre KG குழந்தைகள் முதல் பள்ளியில் உள்ள அனைவரும் பிக்பாஸில் இவர் விஷயங்களை பேச சொல்லி தான் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் வையாபுரி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.