“விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகி விட்டது”... ரசிகர் மன்றத்தின் ரகசியங்களை உடைத்த எஸ்.ஏ.சந்திரசேகர்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jan 27, 2021, 4:40 PM IST
Highlights

அதுமட்டுமின்றி தான் இருந்த போது 100 ரூபாய் டிக்கெட்டை 101 ரூபாய்க்கு ரசிகர்களுக்கு கொடுத்ததாகவும், தற்போது 100 ரூபாய் டிக்கெட் 1000 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். 

விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய உள்ளதாக எஸ்.ஏ.சந்திரசேகர் கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின. அந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே விஜய் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. அதில் தனக்கும் அப்பா எஸ்.ஏ.சி ஆரம்பித்துள்ள கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தன்னுடைய பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தினால் சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டது .

 

இதையும் படிங்க: 

மேலும் தன்னுடைய ரசிகர்கள் யாரும் அந்த கட்சியில் இணைய வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன்பின்னர் கட்சி நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள போட்டியில் விஜய் மக்கள் இயக்கம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். 

என்னைப் போல அப்பா யாருக்கும் கிடைக்கும், அதேபோல் விஜய்யைப் போல் மகனும் யாருக்கும் கிடைக்க வாய்ப்பில்லை. அப்படி இருந்த எங்களை சதி செய்து பிரித்துவிட்டனர். எதை கேட்டாலும் விஜய் அப்பாவை கேட்டுக்கொண்டு செய்யலாம் என்பதால் தன்னை திட்டமிட்டு அவரிடம் இருந்து பிரித்துவிட்டதாக கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: சினேகா வீட்டிற்கு மகள் நைனிகாவுடன் விசிட் அடித்த மீனா... களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம்...!

அதுமட்டுமின்றி தான் இருந்த போது 100 ரூபாய் டிக்கெட்டை 101 ரூபாய்க்கு ரசிகர்களுக்கு கொடுத்ததாகவும், தற்போது 100 ரூபாய் டிக்கெட் 1000 ரூபாய்க்கும் விற்கப்படுவதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். தற்போது விஜய் மக்கள் இயக்கம் வியாபாரமாகிவிட்டதாகவும், ரசிகர்களின் பிரத்யேக காட்சிக்கு என டிக்கெட்களை பதிவு செய்து ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்கள் அதிக விலைக்கு விற்று லாபம் பார்ப்பதாகவும் குற்றச்சாட்டியுள்ளார். எஸ்.ஏ.சந்திரசேகர் இந்த ஓட்டுமொத்த குற்றச்சாட்டுக்களையும் கூறியிருப்பது, சமீபத்தில் விஜய்யால் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்ட புஸ்சி ஆனந்த் மீது தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!