ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு வருகிறது ஆப்பு ! அய்யா அமித்ஷா சும்மா விட மாட்டார் !! எஸ்.வி.சேகர் அதிரடி பேச்சு !!

Published : Aug 14, 2019, 11:19 AM IST
ஊதிப் பெருக்கும் ஊடகங்களுக்கு வருகிறது ஆப்பு ! அய்யா அமித்ஷா சும்மா விட மாட்டார் !!  எஸ்.வி.சேகர் அதிரடி பேச்சு !!

சுருக்கம்

வட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்டவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் பொய்யானது என்றும். இது போன்ற செய்திகளை ஊதிப்பெருக்கி  வெளியிடும் ஊடகங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் ஆப்பு வைப்பார் என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் எஸ்.வி.சேகர், தமிழகத்தில் ஊடங்கள் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார். வட மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிட்ட இளைஞர்கள் கொல்ப்பட்டனர் என்பது ஒரு பொய்யான செய்தி என குறிப்பிட்டார்.

இதே போல் சிறுமி ஒருவர் இந்து கோவிலுக்குள் வைத்து கற்பழித்து கொல்லப்பட்டார் என்ற செய்தியும் பொய்யானது என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சில சாதாரண விஷயங்களை  ஊடங்கள் பெரிதாக்கிவிட்டு பின்னர் அவற்றை அம்போ என்று விட்டு விடுகின்றனர்.

இந்த பத்திரிக்கைகளின் நோக்கமே வதந்தியைப் பரப்புவது தான் என்றும் இதற்கெல்லாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூடிய சீக்கிரம் ஆப்பு வைப்பார் என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

கருத்து சுதந்திரம் என்பது  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து  பணத்தை எடுத்து செலவி செய்ய வேண்டும்,, அடுத்தவர்கள் பாக்கெட்டுக்குள் கையை விடுவது கருத்து சுதந்திரம் ஆகாது என அதிரடியாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!