
தான் எந்த ஜாதியைச் சேர்ந்த பொண்ணு என்று தெரிந்துகொள்ள வலைதளவாசிகள் காட்டிய ஆர்வத்தைக் கண்டுகொதித்து,’ என் ஜாதியை சாக்கடையில்போய் தேடுங்கடா’ என்று நடிகை ரித்விகா கொந்தளித்த பிறகும் மக்கள் தங்கள் ஆர்வத்தைக் குறைத்துக்கொள்வதாயில்லை.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’,’கபாலி’ ஆகிய படங்களில் குறிப்பிடத்தகுந்த பாத்திரங்களில் நடித்த ரித்விகா ‘பிக்பாஸ்2’ சீஸனில் பட்டம் வென்றார். அதை ஒட்டி கூகுளில் ரித்விகாவின் ஜாதி தெரியாவிட்டால் அடுத்த வேளை சோறு இறங்காது என்பது அவரது ஜாதியை கூகுளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேடினர். அதைக்கண்டு வெகுண்டெழுந்த ரித்விகா ‘என் ஜாதியை சாக்கடையில் போய்த்தேடுங்கடா’ என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட பா.ரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தில் மீண்டும் ரித்விகா நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார். ’என்னது மறுபடியும் ரஞ்சித் படமா?’ என்று மூக்கு வியர்த்த நெட்டிசன்கள் மறுபடியும் முழுமூச்சாக ரித்விகாவின் ஜாதியைத் தெரிந்துகொண்டே தீருவது என்று கூகுள் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த முறை இவர்களுக்கு பதிலளிப்பதற்காக ரித்விகா தனது பிஞ்சு போன பழைய செருப்புகளைத் தேடிவருவதாக தகவல்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.