ரவுடி பேபியை தெறிக்கவிட்ட 'ராமுலு ராமுலோ'... சிங்கப் பெண்ணிடம் சரண்டர்! டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன் வீடியோ!

Published : Oct 29, 2019, 05:48 PM IST
ரவுடி பேபியை தெறிக்கவிட்ட 'ராமுலு ராமுலோ'... சிங்கப் பெண்ணிடம் சரண்டர்! டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன் வீடியோ!

சுருக்கம்

தீபாவளி ஸ்பெஷலாக படத்தில் இடம்பெற்றுள்ள 'ராமுலு ராமுலோ' என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. தமனின் துள்ளலான இசையில், அனைவரையும் ஆட்டம்போட வைத்த இந்தப் பாடல், வெளியான 24 மணிநேரத்திலேயே 83 லட்சம் வியூசைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 'மாரி-2' படத்தில் இடம் பெற்றிருந்த 'ரவுடி பேபி' பாடல் 24 மணி நேரத்தில் 70 லட்சம் வியூசைப் பெற்றிருந்தது. 

வழக்கமாக யு-டியூப்பில் ஹிந்திப்படத்தின் பாடல்கள், டீசர்கள் மற்றும் டிரைலர்கள் மட்டுமே கோலோட்சி வருவது வழக்கம். சமீபகாலமாக தமிழ் படங்களின் வீடியோக்களும் ஹிந்திக்கு நிகராக யு-டியூப்பில் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஒரு தெலுங்குப் படத்தின் பாடல் வீடியோவும் இணைந்துள்ளது. 

ஆம், முதல்முறையாக ஒரு தெலுங்குப் படப்பாடல் தமிழ்ப் படப் பாடல்களின் சாதனையை முறியடித்து யு-டியூப்பையை அதிரவைத்து வருகிறது. திரிவிக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் 'அல வைகுந்தபுரம்லு'. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். தீபாவளி ஸ்பெஷலாக படத்தில் இடம்பெற்றுள்ள 'ராமுலு ராமுலோ' என்ற பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. தமனின் துள்ளலான இசையில், அனைவரையும் ஆட்டம்போட வைத்த இந்தப் பாடல், வெளியான 24 மணிநேரத்திலேயே 83 லட்சம் வியூசைப் பெற்று புதிய சாதனை படைத்தது. இதற்கு முன்பு, 'மாரி-2' படத்தில் இடம் பெற்றிருந்த 'ரவுடி பேபி' பாடல் 24 மணி நேரத்தில் 70 லட்சம் வியூசைப் பெற்றிருந்தது. 

இதன்மூலம், ரவுடி பேபியின் சாதனையை ராமுலு ராமுலோ முறியடித்துள்ளது. ஆனால், லைக்குள் அள்ளிய விதத்தில் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெண்ணே' பாடல் படைத்த சாதனையை முறியடிக்க தவறிவிட்டது. 'சிங்கப்பெண்ணே' பாடல், 18 மணிநேரத்தில் 5 லட்சம் லைக்குகளை பெற்றிருந்தது. எனினும், யு-டியூப்பில் தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்துவரும் 'ராமுலு ராமுலோ' பாடல், 4 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ளது

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?