ரோபோ ஷங்கர் பாடிய 'ஆட்டோகாரன்' பாடல்! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published : Mar 09, 2019, 02:57 PM IST
ரோபோ ஷங்கர் பாடிய 'ஆட்டோகாரன்' பாடல்!  இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா?

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பாட்ஷா' படத்தில் இடம்பெற்ற 'நான் ஆட்டோக்காரன்' பாடலை ரஜினி ரசிகர்கள் மட்டும் அல்ல, அனைவருமே அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இந்த பாடலை ரசிக்காத ஆட்டோகாரர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் தற்போது காமெடி நடிகர் ரோபோ ஷங்கர், ஆட்டோகாரன் என தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.   

பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட்  இயக்கி வரும் படத்திற்கு தான் ரோபோ ஷங்கர், இந்த பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இந்த பாடலில் ஆட்டோக்காரர்கள், தினமும் சந்திக்கும் அனுபவங்கள், சிக்கல்கள், குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ரோபோ சங்கரின் குரல் அனைவருக்கும் பரிச்சயமானது என்பதால் அவரை பாட வைத்ததாகவும் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். இந்த பாடலை இசையமைப்பாளர் ஹரிசாய் கம்போஸ் செய்துள்ளார். 

இந்த பாடலில் உள்ள தனி சிறப்பு என்னவென்றால், ஸ்ருதி, தாளம் என எதுவும் இல்லையாம். சாதாரண ஒரு ஆட்டோகாரர் பாடினால் எப்படி இயல்பாக இருக்குமோ அப்படித்தான் இந்த பாடலும் இருக்கும் என போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

லியோ பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய ஜன நாயகன்.... முன்பதிவில் மாஸ் காட்டும் தளபதி...!
கோடி கோடியாய் சம்பாதித்தாலும் தங்கச்சி விஷயத்தில் ராஷ்மிகா எடுத்த தடாலடி முடிவு