விறுவிறுப்பாகும் பெப்சி தேர்தல்..! 3 ஆவது முறையாக தலைவர் பதவிக்கு போட்டி போடும் ஆர்.கே.செல்வமணி..!

By manimegalai aFirst Published Feb 5, 2021, 3:33 PM IST
Highlights

கடந்த நான்கு வருடங்களாக பெப்சி அமைப்பின் தலைவராக இருந்து வரும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக மீண்டும், தலைவர் போட்டிக்கு போட்டியிட உள்ளார்.
 

கடந்த நான்கு வருடங்களாக பெப்சி அமைப்பின் தலைவராக இருந்து வரும், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி மூன்றாவது முறையாக மீண்டும், தலைவர் போட்டிக்கு போட்டியிட உள்ளார்.

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, பெப்சி என்று அழைக்கப்படும்.. தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தின் தலைவராக இரண்டாவது முறை தேர்வு செய்யப்பட்டார். இந்த சங்கத்திற்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது.  அதன்படி 2021-23ம் ஆண்டுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் ஆம் தேதி நடக்க உள்ளதாக அறிவித்துள்ளனர்.

மேலும் தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் போட்டியிட உள்ளவர்கள் குறித்த முழு விவரங்களும், நாளை மறுநாள், பிப்ரவரி 7 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில்,  தலைவர், செயலாளர், துணைச் செயலாளர், உட்பட  13 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் கொரோனா காலத்தில் பெப்சிக்கு நிதியாக ரூ.3.93 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது'' குறிப்பிடத்தக்கது.

மேலும் அம்மா படப்படிப்பு தளம் அமைக்க முதல்வர் பழனிசாமி அறிவித்த ரூ.5 கோடி நிதியில் ஏற்கனவே இரு கட்டமாக வழங்கப்பட்டு விட்டதாகவும், மூன்றாவது தவணையாக பிப்ரவரி 4 ஆம் தேதி, 3.5 கோடி நிதியை முதல்வர் வழங்கி உள்ளார். அதற்காக அவருக்கும், அமைச்சர் கடம்பூர் ராஜுவிற்கும், பெப்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!