24 சங்கங்களுடன் மட்டுமே இணைந்து செயல்படுவோம்!! ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டி!!

By manimegalai aFirst Published Sep 18, 2021, 4:14 PM IST
Highlights

நடிகர் ஆரி அர்ஜூனனின் 'மாறுவோம் மாற்றுவோம்'  அறக்கட்டளை சார்பில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கான இலவச இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆரி அர்ஜூனண் ,

நடிகர் ஆரி அர்ஜூனனின் 'மாறுவோம் மாற்றுவோம்'  அறக்கட்டளை சார்பில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கான இலவச இயன்முறை மருத்துவ சிகிச்சை முகாம் சென்னை வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.  முகாமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஆரி அர்ஜூனண் ,

பிக் பாஸ் நிகழ்ச்சியில்  இருந்து வெளியில் வந்த பிறகு எனக்கு தோள் பட்டையில் பிரச்சனை ஏற்பட்டது. திருவண்ணாமலையில் 1 மாதம் தங்கி இயன்முறை சிகிச்சை எடுத்தேன் ,அதன் பிறகு சரியாகிவிட்டது. நோயாளிகளுக்கு பெரியளவில்  மருத்துவ செலவு  ஏற்படுவதை  தடுக்க இயன்முறை மருத்துவம் உதவுகிறது. செய்தியாளர்கள் , சினிமா , தொழிலாளர்கள் , வணிகர் சங்கம் உட்பட அனைவருக்கும் இலவச இயன்முறை சிகிச்சை வழங்க தயாராக உள்ளேன்.

புற்றுநோய் , இயற்கை உணவுமுறை  குறித்தும்  பெண்களுக்கான மார்பக புற்றுநோய் குறித்தும் எனது ' மாறுவோம் மாற்றுவோம் ' அறக்கட்டளை  மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் " என்று கூறினார்.  மருத்துவ முகாமில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ,

திரைப்படத் தொழிலாளர்களின் நலன் கருதி தமிழக அரசு புதிய அறிவிப்பு  ஏதேனும் வெளியிட வேண்டும். 'அனைவருக்கும் வீடு'  திட்டத்தில்   30 லட்சம் வீடு கட்டும் கொள்கை முடிவை எடுத்துள்ள அரசு அதில்  5ஆயிரம் திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டி தர வேண்டும்.  பெப்சி எனும் தென்னிந்தியத் திரைப்படத்  தொழிலாளர் சம்மேளனம் , அகில இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பான AIFEC-குடன் இணைக்கப்பட்ட சம்மேளனங்களில் ஒன்று.

இந்த ஐபெக் கூட்டமைப்புடன் உள்ள 5 சம்மேளனங்களுடனும் ,  பெப்சியில் உள்ள 24 சங்கங்களுடனும்  40 ஆண்டுகளாக இணைந்து பணி செய்து வருகிறோம்.  இனி வரும் காலத்தில் பெப்சியின் 24  சங்கங்கள்  மற்றும்  ஐபெக்கில் இணைக்கப்பட்டுள்ள சம்மேளங்களுடன் மட்டுமே இணைந்து பணி செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பெப்சி உறுப்பினர்கள் இவர்களுடன் மட்டுமே இனி வரும் காலத்தில் இணைந்து  பணியாற்றுவார்கள் " என்று கூறினார்.

AIFEC எனும் இந்திய திரைப்படத் தொழிலாளர் கூட்டமைப்பில் பெப்சி அமைப்புடன் சேர்த்து  western film employees federation (Mumbai ) , western film employees federation  ( Kolkata) , A.P.federation , Karnataka federation , Kerala federation என 6 சம்மேளங்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பெப்சி அமைப்பில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் , தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் உட்பட 24 சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.

click me!