ஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்குறேன்... பெத்தவங்களுக்கு வாழ் நாள் தண்டனை கொடுக்காதீர்கள்!! சூர்யாவின் ஆதங்க வீடியோ

By manimegalai aFirst Published Sep 18, 2021, 2:03 PM IST
Highlights

நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வால் உயிர்விடும் மாணவர்களுக்காக தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி வரும் நடிகர் சூர்யா, நீட் தேர்வால் உயிர்விடும் மாணவர்களுக்காக தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு பலர் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

நீட் தேர்வு ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை சூறையாடுவதாகவும், அது சமூக நீதிக்கு எதிரானது என்றும், நீட் தேர்வு வைக்கப்படுவதன் மூலம் மருத்துவராக வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்த  ஆயிரக்கணக்கான ஏழை மாணவர்களின் கனவில் தீ வைக்கப்பட்டதாகவும், அதன் வடுக்கள் காலத்திற்கும் மறையாது என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர் நடிகர் சூர்யா. இவருடைய இந்த கருத்துக்கு ஒரு தரப்பினர் தங்களுடைய விமர்சனத்தை தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நீட் தேர்வு அச்சம் காரணமாக கடந்த 15 ஆம் தேதி வேலூரை  சேர்ந்த ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அதே போல் ஒரு மாணவர் தீ வைத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டார். நாமக்கல் மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய கையேடு சோகமாக காணப்பட்ட மாணவி காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படி தொடர்ந்து நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் விபரீத முடிவுகளை நாடி வருவதை தொடர்ந்து தற்போது நடிகர் சூர்யா உணர்வு பூர்வமாக வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே, உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே... என பாரதியின் வரிகளை கூறி தன்னுடைய பேச்சை ஆரம்பித்துள்ளார் நடிகர் சூர்யா.

"மாணவ மாணவிகள் எல்லோரும் வாழ்க்கையில அச்சம் இல்லாமல், நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என ஒரு அண்ணனாக வேண்டி கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு போன மாசம், இல்ல போன வாரம் இருந்த ஏதோ ஒரு கவலை, அல்ல வேதனை, இப்போ இருக்கா? யோசிச்சி பாருங்க. நிச்சயமாக குறைந்திருக்கும், இல்லாமல் கூட போய் இருக்கும்.

ஒரு பரிச்சை உங்களுடைய உயிரை விட பெரியது அல்ல. உங்க மனசுக்கு கஷ்டமா இருக்கா, நீக்க நம்புறவங்க, உங்களுக்கு பிடிச்சவங்க, அப்பா, அம்மா, இல்ல பெரியவங்க, நண்பர்கள், ஆசிரியர்கள் கிட்ட மனசு விட்டு பேசுங்க. இந்த பயம், கவலை, விரக்தி இது எல்லாமே கொஞ்சம் நேரத்தில் மறையும் விஷயங்கள். இந்த தற்கொலை, வாழ்க்கையை முடிச்சிக்குறேனு முடிவு பண்ணுவதெல்லாம் உங்கள ரொம்ப விரும்புறவங்களுக்கு, அப்பா, அம்மா, குடும்பத்துல இருக்குறவங்களுக்கு நீங்க கொடுக்குற வாழ்நாள் தண்டனை.

நான் பல தேர்வுகளில் தோல்வி அடைந்துள்ளேன், ரொம்ப ரொம்ப கேவலமான மார்க்ஸ் வாங்கி இருக்கேன். என்னால உங்கள்ள ஒருத்தனா நிச்சயம் சொல்ல முடியும், மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை இல்லை. சாதிக்குறதுக்கு அதனை விஷயங்கள் இருக்கிறது. உங்கள புரிஞ்சிக்கவும், நேசிக்கவும் அவ்வளவு பேர் இருக்கோம்... 'நம்பிக்கையா தைரியமா இருங்க வாழ்க்கையில எல்லோரும் ஜெயிக்கலாம்'. பெருசா ஜெயிக்கலாம் அச்சமில்லை... அச்சமில்லை அச்சமென்பதில்லையே என கூறி தன்னுடைய பேச்சை முடித்துள்ளார்.

• My Brother ❤🙏🫂 pic.twitter.com/VofVNP1Kvz

— Bibin Sudarsanan (@bibinsudarsanan)

 

click me!