
ஆர்.ஜே, தொகுப்பாளர், காமெடி நடிகர் என பல முகங்களை கொண்டவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி தற்போது முன்னணி காமெடி நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்து படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த தேவி, இவன் தந்திரன் என அனைத்து படங்களிலும் இவருடைய காமெடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.
இவர் தன்னுடைய ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் சலித்துக்கொள்ளாமல் தனக்கேயுரிய காமெடி பாணியில் பதில் கொடுத்தார்.
ஒரு ரசிகர், நடிகர் விக்ரம் பற்றி ரசிகர்களுக்கு தெரியாத ஒரு ரகசியத்தை கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு ஆர்.ஜே. பாலாஜி, அவர் போன் செய்தால் நம்பர் தெரியாது பிரைவேட் நம்பர்னு தான் வரும். சீக்ரெட் ஓகேவா என்று பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.