
மெட்ராஸ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை ரித்விகா, கதாநாயகி என்கிற இடத்தை பிடிக்க முடியவில்லை என்றாலும், நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து குணச்சித்திர வேடங்களிலும், இரண்டாவது நாயகி போன்ற கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிறைவடைந்த... பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு அமைதியாகவும், நிதானமாகவும் விளையாடி பிக்பாஸ் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டார்.
இதனால் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல பெயர் மற்றும் வரவேற்பு இருப்பதால், ரித்விகாவுக்கு தொடர்ந்து கோலிவுட் திரையுலகில் நடிக்க பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் மீடூ சர்ச்சை பற்றி பேட்டி ஒன்றில் கூறியுள்ள ரித்விகா.... "தனக்கும் சின்ன வயதில் அப்படி நடந்துள்ளது என கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். என் வீட்டின் அருகில் இருக்கும் சிலர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்கள் என்றும், ஆனால் அப்போது நான் யாரிடமும் அது பற்றி கூறவில்லை. வளர்ந்தபின் தான் அவர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொண்டது புரிந்தது என கூறியுள்ளார்.
இதனால் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே குட் டச் மற்றும் பேட் டச் பற்றி சொல்லி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.