#BREAKING ஒரே குடும்பத்தில் அடுத்த சோகம்... பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Feb 09, 2021, 02:16 PM IST
#BREAKING ஒரே குடும்பத்தில் அடுத்த சோகம்... பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்...!

சுருக்கம்

ரிஷி கபூர் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் அவரது தம்பி ராஜீவ் கபூர் மரணமடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரபல பாலிவுட்  நடிகரான ரிஷி கபூருக்கு பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூருக்கு புற்றுநோய் இருப்பது கடந்த 2018ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் நாடு திரும்பிய நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  30ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 


ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகையே இந்த துயரம் உலுக்கியது. ரிஷி கபூர் மறைந்து ஓராண்டு நிறைவு பெறுவதற்குள் அவரது தம்பி ராஜீவ் கபூர் மரணமடைந்தது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிஷி கபூருக்கு ரந்திர் கபூர், ராஜீவ் கபூர் என இரு சகோதரர்கள் உள்ளனர். இருவரும் பாலிவுட்டில் புகழ் பெற்ற நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் கபூர் நடிப்பில் 1985ம் ஆண்டு வெளியான ‘ராம் தேரி கங்கா மெய்லி’ 1983ம் ஆண்டு வெளியான ‘ஏக் ஜான் ஹைன் ஹம்’ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெயரையும் புகழும் பெற்றுத்தந்தது. 


தற்போது 58 வயதாகும் ராஜீவ் கபூருக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது சகோதரர் ரந்தீர் கபூர், மும்பை செம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே இருக்கும் இன்லாக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த பாலிவுட் பிரபலங்கள் உட்பட திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!
பவன் கல்யாணுக்காக ராம் சரண் தியாகமா? ரிலீஸ் தேதியை மாற்றிய 'கேம் சேஞ்சர்' நாயகன்; ரசிகர்கள் கவலை!