குடியரசு தினத்தில் நடந்த விவசாயிகள் வன்முறையில் தொடர்பு... பிரபல நடிகர் கைது...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 9, 2021, 11:18 AM IST
Highlights

இந்நிலையில் தலைமறைவாக இருந்த  தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

வேளாண் சட்டமசோதக்களை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் உச்சமாக கடந்த ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்தது. செங்கோட்டைக்குள் அத்துமீறி நுழைந்த விவசாயிகள் போலீசார் மீது தாக்குதல் நடத்தும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின. ஒரு பிரிவினர் செங்கோட்டைக்குள் சீக்கிய மதக்கொடியை ஏற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

 

இதையும் படிங்க: டவலைக் கட்டிக்கொண்டு கவர்ச்சி அட்ராசிட்டி... சூப்பர் சிங்கர் பிரகதியால் நொந்து போன ரசிகர்கள்...!

இந்த வன்முறை தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 123 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கோட்டை நோக்கி விவசாயிகளை திசை திருப்பி வன்முறையை தூண்டியதாக  பஞ்சாபி நடிகர் தீப் சித்து மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சிலரை போலீசார் தேடி வந்தனர். 

 

இதையும் படிங்க: டைட் டி-ஷர்ட்டில் டக்கராக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... வைரலாகும் ஸ்டன்னிங் லுக் போட்டோஸ்...!

நடிகர் தீப் சித்து, செங்கோட்டையில் மதக் கொடியை ஏற்றிய ஜக்ராஜ் சிங், குர்ஜாத் சிங், குர்ஜந்த் சிங் ஆகிய 4 பேரை கைது செய்வதற்கு துப்பு கொடுத்தால் தலா ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என டெல்லி காவல்துறை அறிவித்திருந்தது. மேலும், ஜாஜ்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த  தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 

click me!