அமெரிக்க காதலருடன் நடிகை ரிச்சா காங்கோபாத்யாயவிற்கு டும் டும் டும்..! ரசிகர்கள் வாழ்த்து!

Published : Dec 19, 2019, 12:45 PM ISTUpdated : Dec 19, 2019, 12:46 PM IST
அமெரிக்க காதலருடன் நடிகை ரிச்சா காங்கோபாத்யாயவிற்கு டும் டும் டும்..! ரசிகர்கள்  வாழ்த்து!

சுருக்கம்

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்திலும், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகை ரிச்சா edகங்கோபாத்யாய. இவர் நடித்த இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக 'மயக்கம் என்ன' படத்திலும், நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக 'ஒஸ்தி' படத்திலும் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகை ரிச்சா edகங்கோபாத்யாய. இவர் நடித்த இந்த இரு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குறிப்பாக 'மயக்கம் என்ன' படத்திற்காக, சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது, SIIMA விருது, எடிசன் விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றார். இந்நிலையில் தமிழ் திரையுலகில் இவரை பற்றி ஒரு சில வதந்திகள், கிசு கிசுவாக பரவியதால், இனி தமிழ் படங்களிலேயே நடிக்க கூடாது என முடிவெடுத்ததாக கூறப்பட்டது.

இவர் கடைசியாக கடந்த 2013 ஆம் ஆண்டு 'பாய்' என்கிற தெலுங்கு படத்தில் நடித்தார். இதை தொடர்ந்து, MBA படிப்பதற்காக, அமெரிக்காவிற்கு சென்று அங்கு தன்னுடைய படிப்பை முடித்தார்.

இதை தொடர்ந்து, இவருக்கு கிடைத்த சில படங்களின் வாய்ப்புகளையும் ஏற்கவில்லை. இந்நிலையில்,  தன்னுடைய நீண்ட நாள் காதலரான அமெரிக்காவைச் சேர்ந்த  ஜோ லாங்கெல்லா என்பவரை,  கிறிஸ்தவ முறைப்படியும், இந்துக்கள் முறைப்படியும் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆக முடிவெடுத்துள்ளார்.

இவரின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவ ரசிகர்கள், இவருக்கு தொடர்ந்து தங்களுடைய திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரிச்சா காங்கோபாத்யாய 2007 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடிபொலியாக இருந்ததா குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ்...? முழு விமர்சனம் இதோ
துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது