
தமிழில் எப்படி பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்படும் 'சூப்பர் சிங்கர்' என்கிற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானதோ, அதே போல் வட இந்தியாவில் 'வாய்ஸ் இந்தியா' என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகள் பலர் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகர் பாடகியாக மாறியுள்ளனர்.
சிறுவர்களுகாகவே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஷான், ஹிமேஷ் ரேஷ்மியா மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான பாபன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர்.
ஹோலி பண்டிகை:
இந்நிலையில் அடுத்த மாதம் ஹோலி பண்டிகை வருவதை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடத்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஏற்பாடு செய்து வருகிறது. மேலும் போட்டியாளராக பங்கேற்கும் குழந்தைகளுக்கு இதற்காக ரீகசல் நிகழ்ச்சி நடந்தது.
பேஸ்புக் லைவ்:
இந்த நிகழ்ச்சியை நடுவர் பாபன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்தார். மிகபெரிய குழுவாக கூடி இருந்த அனைவரும் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடும் விதத்தில் ஒரு பாடல் பாடினர். அப்போது திடீர் என யாரும் எதிர்பாராத விதமாக, நடுவர் பாபன் ஒரு சிறுமியின் முகத்தில் கலர் பொடியை பூசி அந்த சிறுமியின் உதட்டில் முத்தம் கொடுத்தார்.
இந்த நிகழ்ச்சியை கண்டவர்கள் மிகவும் கோபமடைந்தனர். பின் அந்த வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து அவர் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.