
சின்னத்திரை நடிகையும், பிரபல சீரியல் நடிகர் ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ, தற்போது தற்கொலைக்கு முயன்ற சம்பவம், சின்னத்திரை வட்டாரத்தை மேலும் பரபரப்பாக்கி உள்ளது.
இந்நிலையில் ஜெயஸ்ரீ, அவருடைய தோழியும், நடிகையுமான ரேஷ்மாவிற்கு கடைசியாக அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் பற்றி, முதல் முறையாக பிரபல ஊடகம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார் ரேஷ்மா.
இதுகுறித்து அவர் கூறுகையில், தற்கொலை செய்து கொள்வதற்கு முன் 4 :30 மணியளவில்... ஜெயஸ்ரீ தனக்கு ஒரு வாய்ஸ் நோட்ஸ் அனுப்பினார். அதில் நான் ஏமார்ந்து விட்டேன். என்னை ஏமாற்றி விட்டனர். என்னை மன்னித்துவிடு. நீ எனக்கு ஒரு நல்ல தோழியாக இருந்திருக்கிறாய் என கூறினார்.
பின் தன்னுடைய மகள் நண்ணுவை பார்த்து கொள் என அந்த வாய்ஸ் நோட்டில் பேசி இருந்தார். இதனை கேட்டதும் நாங்கள் பதறியபடி போன் செய்தபோது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக இங்கு வந்து பார்த்தபோது, என்னிடம் மகளை நண்ணுவை பார்த்து கொள் என கூறி கொண்டே இருந்தார்.
மேலும் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியுள்ளார் ரேஷ்மா.
மேலும் செய்திகள்: வானில் பறந்து லாஸ்லியா பொங்கல் கொண்டாட்டம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.