பிக்பாஸ் வீட்டிற்கு டாடா சொன்ன மீனு குட்டி..!

Published : Oct 18, 2020, 07:46 PM ISTUpdated : Oct 19, 2020, 10:33 AM IST
பிக்பாஸ் வீட்டிற்கு டாடா சொன்ன மீனு குட்டி..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான், புது புது பிரச்சனைகள், காதல், சண்டை என கலகலப்பு ஆகியவை கூடி கொண்டே செல்கிறது. எனினும் இந்த வாரம்  போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நீதி

பிக்பாஸ் வீட்டில் இப்போது தான், புது புது பிரச்சனைகள், காதல், சண்டை என கலகலப்பு ஆகியவை கூடி கொண்டே செல்கிறது. எனினும் இந்த வாரம்  போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்பது இந்த நிகழ்ச்சியின் நீதி. அந்த வகையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ள நிலையில் இது குறித்த ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

 இந்த வார நாமினேஷனில் சனம்ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா மற்றும் ஆஜித் ஆகியோர்கள் இருந்த நிலையில், இவர்களில் இருந்து ஷிவானி, ஆஜித், மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்ற பட்டதாக அறிவித்தார் கமல், எனவே மீதம் உள்ள நான்கு நபர்களில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு விடைபெறுவார் என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது.

சனம்ஷெட்டியை மட்டும் 11 பேர் நாமினேஷன் செய்திருந்ததால், ரேகா அல்லது சனம் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டது.

இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, நடிகை ரேகா தான், மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறியுள்ளார். மேலும் நடிகை ரேகா தன்னுடைய இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளிறி விட்டதாகவும் கூறியுள்ளார். எல்லோருக்கும் மத்தி மீன் குழம்பு வச்சி கொடுத்துட்டு, மீனு குட்டி பிக்பாஸ் வீட்டுக்கு டாட்டா சொல்லி விட்டார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!