Oscars 2022 Host : ஆஸ்கர் விருது விழாவில் அதிரடி மாற்றம்! 4 வருஷமா மிஸ் பண்ணது... இப்போ மீண்டும் வந்தாச்சு

Ganesh A   | Asianet News
Published : Feb 16, 2022, 10:46 AM IST
Oscars 2022 Host : ஆஸ்கர் விருது விழாவில் அதிரடி மாற்றம்! 4 வருஷமா மிஸ் பண்ணது... இப்போ மீண்டும் வந்தாச்சு

சுருக்கம்

94-வது ஆஸ்கர் விருதுகள் (Oscars 2022) வழங்கும் விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

உலக அளவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது ஆஸ்கர் விருது (Oscar Award). இந்த விருதை வாங்க வேண்டும் என்பது, திரை துறையை சார்ந்த ஒவ்வொரு தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளின் மிகப்பெரிய கனவு என்றே கூறலாம். ஆண்டுதோறும் இந்த விருது விழா நடத்தப்பட்டு வருகிறது.

உலகமே உற்றுநோக்கும் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா வரும் மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்பவர்களுக்கு தடுப்பூசி கட்டாயமில்லை என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, ஆஸ்கர் விருது விழாவை இந்த ஆண்டு 3 பெண்கள் தொகுத்து வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தொகுப்பாளர்கள் இன்றி ஆஸ்கர் விருது விழா நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் (Wanda Sykes), ஏமி ஸ்கூமர் (Amy Schumer), ரெஜினா ஹால் (Regina Hall) ஆகியோர் தொகுத்து வழங்க உள்ளனர்.

ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை. மூவருமே நகைச்சுவையில் சிறந்து விளங்குபவர்களாம். உலகப் புகழ் பெற்ற ஆஸ்கர் நிகழ்ச்சியை 3 பெண்கள் தொகுத்து வழங்க உள்ளதால், இந்த ஆண்டு விருது விழா களைகட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இந்தியா சார்பில் சூர்யாவின் ஜெய் பீம் (Jai Bhim), மோகன்லாலின் அரபிக்கடலின் சிங்கம் ஆகிய படங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேற முடியாமல் அண்மையில் வெளியேறியது. இருப்பினும் ‘ரைட்டிங் வித் பயர்’ என்கிற இந்திய ஆவணப்படம் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!
ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!