
உள்ளூர் பிரச்சினைகளிலிருந்து ஓரளவு கரையேறியிருக்கும் நிலையில் ‘சர்கார்’ படத்துக்கு லேட்டஸ்டாக மலேசிய மக்கள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தில் கிருஷ்ணர் சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாகவும், அதை நீக்கி மறு சென்ஸார் செய்தபிறகே படத்தை வெளியிடவேண்டும் என்றும் மலேசிய மக்கள் தெரிவித்துள்ளனர்.
மலேசிய மக்களிடம் அரசல்புரசலாக எழுந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, சர்கார் திரைப்படத்தில் இந்து கடவுள் ‘கிருஷ்ணர்’ சிலை தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக மலேசியா இந்து சங்கத்தின் தலைவர் டத்துக் ஆர்.எஸ்.மோகன் ஷான் புகார் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மலேசிய தணிக்கை வாரியத்திடமும் அவர் புகார் கொடுத்தார். இந்துக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த காட்சியை நீக்க வேண்டும் எனவும் டத்தோ ஆர்.எஸ்.மோகன் ஷான் தணிக்கை வாரியத்திடம் மனு கொடுத்தார்.
இதுகுறித்து உடனடியாக ஆலோசனை நடத்திய மலேசிய தணிக்கைக் குழு, சர்ச்சைக்குரிய கிருஷ்ணர் சிலை விவகாரத்தை படத்திலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தது. மலேசியாவிலும் இப்படத்திற்கு மறு சென்ஸார் நடந்த நிலையில் கிருஷ்ணர் சிலை காட்சி நீக்கப்பட்ட சர்கார் படம் நாளை ரிலீஸாகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.