23 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிகராக ரீஎன்ட்ரி கொடுக்கும் சுரேஷ் மேனன் .....!!!

 
Published : Nov 06, 2016, 09:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
23 வருடத்திற்கு பிறகு சூர்யாவுடன் இணைந்து நடிகராக ரீஎன்ட்ரி கொடுக்கும் சுரேஷ் மேனன் .....!!!

சுருக்கம்

பிரபல ஒளிப்பதிவாளர், நடிகர், இயக்குனர் சுரேஷ் மேனனை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. நடிகை ரேவதியின் முன்னாள் கணவரான இவர் கடந்த 1993ஆம் ஆண்டு வெளிவந்த 'புதிய முகம்' படத்தில் நடித்து அந்த படத்தை இயக்கியும் இருந்தார்.
 
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சுரேஷ் மேனன் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சுரேஷ் மேனன் உறுதி செய்துள்ளார்.
 
இந்த படத்தில் தான் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவில்லை என்றும் படம் முழுவதும் வரும் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாக சுரேஷ் மேனன் கூறினார். 

மேலும் தனது கேரக்டர் குறித்து இதற்கு மேல் தற்போதைக்கு சொல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இம்மாத இறுதியில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
'தானா சேர்ந்த கூட்டம்' படம் மட்டுமின்றி இன்னொரு படத்திலும் சுரேஷ் மேனன் நடிக்கவுள்ளார். ஷங்கர் உதவியாளர் வெங்கட் இயக்கவுள்ள '4G' என்ற படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?