
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி தேஜா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான கிராக் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. கோபிசந்த் இயக்கி இருந்த இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
இதையடுத்து ரவி தேஜா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘கில்லாடி’. ரமேஷ் வர்மா இயக்கி உள்ள இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தியும், மீனாட்சி சவுத்ரியும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யநாராயணா தயாரித்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இப்படம் வருகிற பிப்ரவரி 11-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இதனால் இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கில்லாடி படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நேற்று வெளியான இந்த டிரெய்லர், யூடியூப்பில் 2.5 மில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது. டிரெய்லரைப் பார்த்து பிரம்மித்துப் போன ரசிகர்கள், அது செம்ம மாஸாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.