
இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்து இன்று வெளியான படம் தான் காதலிக்க நேரமில்லை. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க ரெட் ஜெயிண்ட் நிறுவனத்தின் மூலமாக உதயநிதி ஸ்டாலின் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தில் ரவி மோகன் உடன் இணைந்து யோகி பாபு, வினய் ராய், சுனில், சடகோபன் ரமேஷ், வினோதினி வைத்யநாதன், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
சித்தார்த் (ரவி மோகன்) ஐடி ஊழியர். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் ஷ்ரேயாவை (நித்யா மேனன்) காதலிக்கிறார். தனது காதலை நண்பர்களின் உதவியால் அவரிடம் வெளிப்படுத்துகிறார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சித்தார்த்தின் கல்லூரி காதலி குறுக்கிடுகிறாள். இதையடுத்து சித்தார்த் தன்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்து அவரிடமிருந்து பிரிந்து சென்றுவிடுகிறார்.
சித்தார்த் எவ்வளவு முயற்சித்தும் ஷ்ரேயா ஏற்றுக்கொள்ளவில்லை. கோபத்தின் உச்சத்திற்கு சென்ற சித்தார்த், அவரை அடித்துவிடுகிறார். கர்ப்பிணியாக இருக்கும் ஷ்ரேயா மது அருந்த தொடங்குகிறார். அதன் பிறகு இருவரும் இணைந்தார்களா? அவர்களது வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தோட மீதிகதை.
ஏற்கனவே ரவி மோகன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிரதர் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதையடுத்து வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரவி மோகனுக்கு காதலிக்க நேரமில்லை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் கொடுத்த இயக்குநர் மாரி செல்வராஜ், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான உறவில் ரொம்ப முக்கியமான ஒரு பகுதியை இந்தப் படம் எடுத்துக் காட்டுகிறது. ரொம்பவே நன்றாகவே வந்திருக்கு. உணர்வுப்பூர்வமான ஒரு படம். எதிர்கால வாழ்க்கையை இந்தப் படம் கனெக்ட் செய்கிறது. பொங்கலுக்கு ஏற்ற ஒரு படமாக காதலிக்க நேரமில்லை இருக்கும் என்று கூறியுள்ளார்.
மாரி செல்வராஜைத் தொடர்ந்து இயக்குநர் ஏ எல் விஜய் படம் பற்றி கூறியிருப்பதாவது: படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இசையும் நன்றாகவே வந்திருக்கிறது. ஏ ஆர் ரஹ்மான் தான் ஹீரோ. கண்டிபபா இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.