
பிரபல நடிகையும், சமத்துவ மக்கள் கட்சியின் பொது செயலாளருமான சரத்குமாரின் மனைவி ராதிகா ராடன் மீடியா என்கிற பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த தயாரிப்பு நிறுவனத்தை முதலில் ராதிகாவின் மகள் ரேயான் நிர்வகித்து வந்தார், தற்போது அவர் திருமணம் ஆகி கணவருடன் வெளிநாட்டிற்கு சென்றதும், ராடன் நிறுவனத்தின் அனைத்து கணக்கு வழக்குகளை ராதிகா தான் நிர்வாகம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ராதிகாவின் ராடன் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர், இதை தொடர்ந்து ராதிகா மற்றும் அவரது கணவர், சரத்குமார் ஆகியோருக்கு ஐடி அலுவலகத்தில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டது.
இதுகுறித்து கணவன் மனைவி இருவரும் நேற்றைய தினம், வருமான வரி அலுவலகத்தில் ஆஜராகினர். அப்போது ராடன் நிறுவனத்தில் கைப்பற்ற பட்ட ஆதாரங்களை வைத்து, அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தியதாக கூறப்பட்டது.
தற்போது என்ன ஆதாரங்கள் ராடன் அலுவலகத்தில் சிக்கியது என, தெரிய வந்துள்ளது, ராடன் நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது 5 கோடி ரூபாய் பணம் சிக்கியதாகவும், பல கோடி ரூபாய் ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் பலர் அடுத்து யார் வீட்டை தட்டுவார்கள் அதிகாரிகள் என்கிற பதற்றத்துடனே இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.