
பிரபல பாலிவுட் பிரபலன்களான நடிகை தீபிகா படுகோன் மற்றும் கணவர் ரன்வீர் சிங் இருவரும், 6 வருடமாக காதலித்து வந்த நிலையில் கடந்த மாதம் தான் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இவர்கள் திருமணம் முடிந்து முதல் முறையாக மும்பையில் நடைபெற்ற ஸ்டார் ஸ்க்ரீன் விருது விழாவில் ஜோடியாக பங்கேற்றனர். இந்த விழாவில் 'பத்மாவத்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது ரன்வீர் சிங்கிற்கு வழங்கப்பட்டது.
மேலும், திருமணம் முடிந்து இவர்கள் இருவரும் ஒன்றாக பங்கேற்கும் நிகழ்ச்சி இது, என்பதால் ரன்வீர் சிங் தீபிகா பற்றி சொல்வர் என்பதை கேட்க, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆவலாக காத்திருந்தனர்.
இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மேடைக்கு வந்த ரன்வீர் சிங் சிரித்தவாறு கையில் விருதை பெற்ற பின், பேசத் துவங்கினார்.
'பத்மாவதி' படத்தில் நான் ஆசைப்பட்ட ராணி எனக்கு கிடைக்கவில்லை ஆனால் நிஜ வாழ்க்கையில் என்னுடைய ராணி கிடைத்துவிட்டால். என காதலோடு தீபிகா படுகோனே பார்த்து பேசினார். உன்னை நேசிக்கிறேன் தீபிகா. இந்த ஆறு வருடத்தில் நான் எதையாவது சாதித்திருந்தால், அதற்கு நீ மட்டுமே காரணம்.
சினிமாவில் என்னை ஜொலிக்கும் அளவிற்கு செதுக்கியது நீதான் உன்னால் கிடைத்த அனைத்திற்கும் நன்றி. ஐ லவ் யூ தீபிகா என்றார். இதைக் கேட்டதும் ஒரு நிமிடம் கண்கலங்கி அனைவர் மத்தியிலும் கண்ணீரோடு அமர்ந்திருந்தார் தீபிகா. எனினும் சமாளித்துக்கொண்டு சிரித்தார். இது சம்பந்தமான காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.