RanbirKapoor |பெயரிடும் முன்னரே ரிலீஸ் தேதியை அறிவித்த ரன்பீர் கபூர்; பாலிவுட் நடிகரின் வைரல் பதிவு

Kanmani P   | Asianet News
Published : Nov 18, 2021, 12:50 PM ISTUpdated : Nov 18, 2021, 01:54 PM IST
RanbirKapoor |பெயரிடும் முன்னரே ரிலீஸ்  தேதியை அறிவித்த ரன்பீர் கபூர்;  பாலிவுட் நடிகரின் வைரல் பதிவு

சுருக்கம்

2023-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று தனது பெயரிடாத புதிய படம் ரிலீசாக உள்ளதாக ரன்பீர் கபூர் இன்ஸ்டா பதிவு செய்துள்ளார்.

ரன்பீர் கபூர், அலியாபட் நட்சத்திர ஜோடிகள் குறித்த பேச்சுதான் பாலிவுட் முழுதும் அந்த அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்திவரும் இந்த ஜோடிகள் அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகின்றனர். இதற்கிடையே அடுத்த வருடம் திரைக்கு வரவுள்ள Sham shera படத்தில் ரன்பீர் கபூர் பிஸியாக உள்ளார். இந்த படத்தை Karan Malhotra இயக்க Mithoon இசையமைக்கிறார். Aditya Chopra தயாரிப்பில் உருவாகும் இந்த படம் 2022 மார்ச் 18 -ம் தேதி திரையிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூரின் அடுத்த பெயரிடப்படாத திரைப்படம்  வெளியீட்டு தேதி  அறிவிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து தயாரிப்பாளர்கள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் ; அதில் , “ரன்பீர் கபூர் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்துள்ள லவ் ரஞ்சனின் பெயரிடப்படாத அடுத்த படம், குடியரசு தினமான ஜனவரி 26, 2023 அன்று திரையரங்குகளில் வெளியிடப்படும்!” ரன்பீர்-ஷ்ரத்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த முயற்சியில் டிம்பிள் கபாடியா மற்றும் போனி கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். என  கூறப்பட்டுள்ளது.

முன்னதாக காதல் நகைச்சுவை படத்தில் ரன்பீர் கபூரின் பெற்றோராக போனி கபூர் மற்றும் டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பார்கள் என்று  தகவல் வெளியாகிருந்தது.

இந்த பொழுதுபோக்கு படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது டெல்லியில்  நடைபெற்று வருகிறது. இந்த படத்தை லவ் ரஞ்சன் & அங்கூர் கர்க் தயாரித்துள்ளனர் மற்றும் குல்ஷன் குமார் மற்றும் பூஷன் குமார் வழங்குகிறார்கள். இந்த படம் குறித்து ரன்பீர் கபூர் தனது இன்ஸ்டா பக்கத்தில் செய்துள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!