Captain | ஆர்யா 33 டைட்டில் ரிலீஸ் ; ஆர்யாவின் நெகிழ்ச்சி பதிவு!!

Kanmani P   | Asianet News
Published : Nov 18, 2021, 11:59 AM ISTUpdated : Nov 18, 2021, 12:02 PM IST
Captain | ஆர்யா 33  டைட்டில் ரிலீஸ் ; ஆர்யாவின் நெகிழ்ச்சி பதிவு!!

சுருக்கம்

ஆர்யாவின் 33-வது படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டைட்டில் குறித்து பதிவிட்டுள்ள ஆர்யா மீண்டும் எனக்கு பிடித்த நபர், இயக்குனர் மற்றும் சகோதரருடன் இணைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

’சார்பட்டா பரம்பரை’, ‘அரண்மனை 3’ ஆர்யாவின் ‘எனிமி’ வெளியாகியது. ஆர்யாவின் அடுத்தபடம்  ஆர்யா 33 என்ற பெயரில் பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே ஆர்யாவை வைத்து ‘டெடி’ படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 இப்படத்தில் சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

இமான் இசையமைக்க மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார். ஆர்யாவின் 33வது திரைப்படமாக உருவாகும் இப்படம் பற்றி இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் கூறுகையில், “பொது முடக்கத்தால் பல காலமாக இயங்காமல் இருந்த திரையுலகம் மிகவும் சந்தோஷமாக உள்ளது. இந்நேரத்தில் இந்தப் படத்தை தயாரிக்க பெரும் ஆர்வம் காட்டி எனது தயாரிப்பாளராக நடிகர் ஆர்யா முன்வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எல்லா நடிகர்களுக்கும், இயக்குநர்கள் உருவாக்கும் கதாபாத்திரங்களுக்குள் தங்களை புகுத்திக்கொள்ளும் திறன் இல்லை. ஆனால் ஆர்யா அப்படியில்லை. இதற்கு ஆர்யாவின் 33 படங்களும் சாட்சி, குறிப்பாக அவர் கடைசியாக நடித்த டெடி, அரண்மனை 3, சார்பட்டா பரம்பரை திரைப்படங்களைக் கூறலாம். அந்த வகையில் இந்த புதிய படம் கண்டிப்பாக அவருக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த படத்தில் அவருடைய கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்திராத கதாபாத்திரமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

சக்தி சவுந்தர்ரஜன் ஏற்கனவே  நடிகர் ரவியின் டிக் டிக் டிக், மிருதன் மற்றும் ஆர்யாவின் டெட்டி உள்ளிட்ட ஆர்யாவின் படங்களை இயக்கியுள்ளார். இந்த மூன்று படங்களும் மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.  கேப்டன் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சவுந்தராஜன் இணைகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆர்யாவின் புதிய பட டைட்டில் வெளியாகியுள்ளது. கேப்டன் என இந்த படத்திற்கு கேப்டன் என பெயரிடப்பட்டுள்ளது. தமிழ்,தெலுங்கு,ஆங்கிலம் என மூன்று மொழிகளில் இந்த படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டைட்டிலில் படி ஆர்யா படம் பக்க மாஸ் படமாக தயாராகும் என் தெரிகிறது.

இந்த டைட்டில் குறித்து பதிவிட்டுள்ள ஆர்யா மீண்டும் எனக்கு பிடித்த நபர், இயக்குனர் மற்றும் சகோதரருடன் இணைகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!