இரு உயிர்களைப் பலிகொண்ட படப்பிடிப்பு...வரலட்சுமி சரத் படத் தயாரிப்பாளர் கைது...

Published : Apr 05, 2019, 03:54 PM IST
இரு உயிர்களைப் பலிகொண்ட படப்பிடிப்பு...வரலட்சுமி சரத் படத் தயாரிப்பாளர் கைது...

சுருக்கம்

வரலட்சுமி சரத்குமார் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் நடித்துவரும் ’ரணம்’கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக இன்று கைது செய்யப்பட்டு நீதி மன்றக்காவலில் வைக்கப்பட்டார்.

வரலட்சுமி சரத்குமார் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் நடித்துவரும் ’ரணம்’கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக இன்று கைது செய்யப்பட்டு நீதி மன்றக்காவலில் வைக்கப்பட்டார்.

வி.சமுத்ரா இயக்கத்தில் சிரஞ்சீவி சார்ஜா, சேத்தன் நடிப்பில் ‘ரணம்’ என்ற பெயரில் கன்னட மொழிப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தின் சண்டைக் காட்சிக்கான படப்பிடிப்பு பெங்களூரு அருகேயுள்ள பாகலூரு பகுதியில் கடந்த 29ம் தேதியன்று நடைபெற்றது. காட்சி அமைப்பின்படி கார் மோதி தீபிடிப்பது போன்ற அமைப்புகள் செய்யப்பட்டபோது அங்கிருந்த ஒரு எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் படப்பிடிப்பை பார்க்க வந்திருந்த சுமைரா(28), ஆயிரா(5) ஆகிய இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயத்துடன் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் இவ்விபத்து தொடர்பாக பாகலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் ஸ்டண்ட் மாஸ்டர் கேஸ் சிலிண்டரை கவனக்குறைவாகக் கையாண்டதே இருவர் இறப்புக்குக் காரணம் என்று கண்டறிந்து ஸ்டண்ட் மாஸ்டர் சுபாஷ்.கே. மீது கடந்த திங்களன்று வழக்கு பதிவு செய்திருந்தனர்.

 இந்நிலையில் அப்படப்பிற்கு முறைப்படி போலீஸார் அனுமதி பெறவில்லை என்றும் தகவல் அறிந்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போலீஸார் விரைந்து வந்தபோது விசாரணைக்கு ஒத்துழைக்காமல்  படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த அனைவரும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டதாகவும் கூறி இன்று காலை படத்தின் தயாரிப்பாளர் கனகபுரா ஸ்ரீனிவாஸை கைது செய்து மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு