“ அருவாசண்ட “ படத்திற்காக பாடல் பாடிய ரம்யா நம்பீசன்...!

 
Published : Jun 04, 2018, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
“ அருவாசண்ட “ படத்திற்காக பாடல் பாடிய ரம்யா நம்பீசன்...!

சுருக்கம்

ramya nambeesan sing a aruvasandai movie

சிலந்தி, ரணதந்த்ரா படங்களை தொடர்ந்து ஆதிராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி முடித்திருக்கும் படம் “ அருவாசண்ட “

கபடி விளையாட்டையும், கௌரவக் கொலைகளையும் பின்னணியாகக் கொண்ட அதிரடிப் படமாக உருவாகியிருக்கும், இதன் கிளைமாக்ஸ் காட்சி சமூக அவலங்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக, உணர்வுப் பூர்வமாக எடுக்கப்பட்டுள்ளது.  

“ இந்த படத்தில் மூன்று அட்டகாசமான பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இரண்டு பாடல்களை நான் எழுதியிருக்கிறேன்.

வைரமுத்து எழுதிய “ சிட்டு சிட்டுக் குருவி வாலாட்டுதோ   “ தொட்டுத்  தொட்டு இழுத்து தாலாட்டுதோ “ என்ற பாடலை தரண் இசையில் நடிகை  ரம்யா நம்பீசன் அருமையாக பாடியிருக்கிறார் உடன் இணைந்து பாலாஜி ஸ்ரீ பாடியிருக்கிறார். 

இந்த பாடலுக்கு ராதிகா நடனம் அமைத்துள்ளார். கேரளாவில் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப் பட்டுள்ளது.

சந்தோஷ்பாண்டி ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் கல்லேரி கலையை கவணிக்க, வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பை கையாண்டிருக்கிறார். அதிரடி சண்டைக் காட்சிகளை தளபதி தினேஷ் அமைத்துள்ளார். புதுமுகம் ராஜா, மாளவிகா மேனன் நாயகன் நாயகியாக நடிக்க முக்கிய வேடங்களில் ஆடுகளம் நரேன், சௌந்தர்ராஜா, கஞ்சா கருப்பு, சுஜாதா, இயக்குனர் மாரிமுத்து, காதல் சுகுமார், விஜய் டிவி சரத் உட்பட பலர் நடித்திருக்கின்றனர்.

ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன் சார்பில் வி.ராஜா பிரமாண்டமாக தயாரித்திருக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. பாடல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!