நடிகை ரம்யா கிருஷ்ணன், செப்டம்பர் 15 ஆம் தேதி, தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பல்வேறு மீடியாக்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என பலர் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்த நிலையில், அனைவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ரம்யா கிருஷ்ணன், செப்டம்பர் 15 ஆம் தேதி, தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அவருக்கு பல்வேறு மீடியாக்கள், ஊடகங்கள், ரசிகர்கள் என பலர் தங்களுடைய வாழ்த்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்த நிலையில், அனைவருக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
1983 ம் ஆண்டு, தன்னுடைய 13 வது வயதில் 'வெள்ளை மனசு' திரைப்படம் மூலம் தன் திரையுலக பயணத்தை துவங்கிய ரம்யா கிருஷ்ணன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின், வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் குறைந்த போது, சின்னத்திரை சீரியல் ஹீரோயினாக மாறி, தங்கம், வம்சம் ஆகிய தொடர்களில் நடித்தார். இவருடைய திரையுலக பயணத்தில் பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்தாலும், சூப்பர் ஸ்டாருடன் நடித்த 'படையப்பா' படத்தில் இவர் நடித்த நீலாம்பரி வேடம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நிலைத்துள்ளது.
இதை தொடர்ந்து, 'பாகுபலி' படத்திலும் ராஜா மாதா சிவகாமி தேவியாக நடித்து, உலக அளவில் பிரேமலமானார். 50 வயதை எட்டியும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் இருந்தால், கவர்ச்சி வேடங்களிலும் துணிந்து நடிப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கு சினிமா மீதும் நடிப்பின் மீதும் உள்ள இந்த ஈடுபாடு தான் ரசிகர்கள் மனத்தில் இ வரை நிலை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்க்கு ரசிகர்கள், பிரபலங்கள், மீடியாக்கள், ஊடகங்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. ரம்யா கிருஷ்ணனும் குடும்பத்தினருடன் இரவில் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில் தற்போது இவர், தன்னுடைய பிறந்தநாளுக்கு வாழ்த்திய ரசிகர்கள், பிரபலங்கள், ஊடகங்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on Sep 16, 2020 at 8:46am PDT