ரத்தம் சொட்ட சொட்ட... பெண்களின் லிப்லாக்! ராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ் லெஸ்ப்பியன்' ஃபர்ஸ்ட்லுக் இதோ!

By manimegalai aFirst Published Aug 10, 2020, 12:57 PM IST
Highlights

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் படம் இயக்கி வரும் ராம் கோபால் வர்மா, தற்போது லெஸ்பியன், கதையம்சம் கொண்ட கிரைம் தில்லார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் படம் இயக்கி வரும் ராம் கோபால் வர்மா, தற்போது லெஸ்பியன், கதையம்சம் கொண்ட கிரைம் தில்லார் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா ஓய்வில், சர்ச்சைகளுக்கும், கிளுகிளுப்புகளுக்கும் பஞ்சம் இல்லாதா கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி ரசிகர்களை திணறடித்து வருகிறார் ராம் கோபால் வர்மா.

ஓடிடி பிளாட்பாரத்திற்கு, சென்சார் கிடையாது என்பதால்... இவருடைய படங்களில் கொஞ்சம் கூடுதலாகவே கவர்ச்சியை வாரி வழங்கி வருகிறார்.  

அவர் இயக்கி வரும் ஒவ்வொரு படங்களின் ஸ்டில்களும், டிரைலர்களும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இளைஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ராம்கோபால் வர்மா தனது அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அறிவித்துள்ளார். ராம்கோபால் வர்மாவின் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’டேஞ்சரஸ்’என்றும் இந்த திரைப்படம் ஒரு லெஸ்பியன்  கதையம்சம் கொண்ட படம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் அவரது முந்தைய படத்தில் நடித்த அப்சரா ராணி மற்றும் நயினா கங்குலி ஆகிய இருவரும் லெஸ்பியனாக நடிக்க உள்ளனர். ராம்கோபால் வர்மாவின் இந்த படமும் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது என்பது இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் இருந்தே தெரிகிறது. மேலும் ரத்தம் சொட்ட சொட்ட இருவரும் லிப் லாக் செய்து கொள்ளவது போன்ற போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

DANGEROUS stars Naina Ganguly and Apsara Rani as 2 star crossed lovers willing to kill and die for each other ..it’s designed as an epic emotional classic love story (Insta- https://t.co/nhBlo6fVM9) and (Insta- https://t.co/Kyr57boACd) pic.twitter.com/dFSabZfL38

— Ram Gopal Varma (@RGVzoomin)

 

click me!