எனக்கும் "அஜித்துக்கும் பூர்வ ஜென்மம் பந்தம் உள்ளது"... அதனால் தான் இது நடந்தது... ரமேஷ் கண்ணா உருக்கம்...

 
Published : Apr 21, 2017, 11:16 AM ISTUpdated : Sep 19, 2018, 03:10 AM IST
எனக்கும் "அஜித்துக்கும் பூர்வ ஜென்மம் பந்தம் உள்ளது"... அதனால் தான் இது நடந்தது... ரமேஷ் கண்ணா உருக்கம்...

சுருக்கம்

ramesh kanna talk about ajith

அஜித்துடன் நடித்தவர்கள் அவ்வப்போது தாங்கள் 'தல'யுடன் நடித்த படங்கள் பற்றியும் அவருடன் பழகிய நினைவுகளையும்  செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம் தான்.

அந்த விதத்தில் அஜித்துடன் வரலாறு', ;அட்டகாசம்', 'ஆஞ்சநேயா', 'வில்லன்', 'அமர்க்களம்', 'உன்னை கொடு என்னை தருவேன்', போன்ற படங்களில் நடித்துவரும் அஜித்தை வைத்து 'தொடரும்' என்கிற படத்தை இயக்கியவருமான ரமேஷ் கண்ணா இருவருக்கும் உள்ள நட்பு பற்றி மனம்திறந்துள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில் எனக்கும் அஜித்துக்கும் போன ஜென்ம பந்தம் இருக்கும் என நான் நினைக்கிறேன் என்றும். அதனால் தான், நான்  இயக்கிய முதல் படமான 'தொடரும்' படத்தில் அஜித் நடித்தார் என கூறி மெய்சிலிர்த்து போனார்.

பின் அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் கொண்டிருந்த அஜித், புதுமுக இயக்குநர் என நினைக்காமல் என்னுடைய இயக்கத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறியுள்ளார். மேலும் அவருடைய நிறைய படங்களில் நான் நடித்திருப்பதும் எனக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக கருதுகிறேன்' என்று பேட்டி ஒன்றில் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?